search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை புயல்"

    தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகும் புயல் 15-ந்தேதி காலை சென்னை அருகே மையம் கொள்ளும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain #Chennaicyclone
    சென்னை:

    இந்தியப்பெருங்கடலை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    14-ந்தேதி மாலை வட தமிழக கடற்கரையோர பகுதியை நெருங்கும் இந்தப் புயல் 15-ந்தேதி காலை முதல் சென்னை அருகே மையம் கொள்ளும். அதன்பிறகு வடக்கு திசையில் நகர்ந்து 16-ந்தேதி இரவு அல்லது நள்ளிரவில் வலு இழந்து ஆந்திராவின் நெல்லூருக்கும், விசாகப்பட்டினத்துக்கும் இடையே கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் உருவானதும் தமிழகத்தை நெருங்கும் போது அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது. சென்னை அருகே வரும்போது வடக்குதிசை காற்றால் வடக்கு நோக்கி நகரும் போது மெதுவாக வலு இழக்க வாய்ப்பு உள்ளது.



    புயல் 15-ந்தேதி காலை முதல் இரவு வரை சென்னை அருகே நாள் முழுவதும் மையம் கொண்டு இருக்கும் என்றும் இதனால் வட தமிழகத்தில் 13-ந்தேதி தொடங்கும் மழை 14-ந்தேதியும், 15-ந்தேதியும் வலுவான காற்றுடன் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    புயல் முதலில் சென்னைக்கும், புதுவைக்கும் இடையே மையம்கொள்ளும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று காலை நிலவரப்படி சென்னைக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே செல்லும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமிஞ்சிய கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  #IMD #TNRain #Chennaicyclone
    ×